முகப்பு
தற்போதைய செய்திகள்

தருமபுரி தலித் இளைஞர் இளவரசன் சாவு சம்பவம்: நீதி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்: 13 பேர் கைது

தருமபுரி தலித் இளைஞர் இளவரசன் இறந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த பெண் உள்பட 13 பேரை

Updated On : 6 ஜூலை, 2013 at 7:47 PM
பகிர்:

தருமபுரி தலித் இளைஞர் இளவரசன் இறந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த பெண் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு இன்று மாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஞானகுரு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட தலைவர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தருமபுரி தலித் இளைஞர் இளவரசன் சாவுச் சம்பவம் குறித்து உண்மையை கண்டறிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 13 பேரை விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.