முகப்பு
தற்போதைய செய்திகள்

நித்திரவிளை அருகே சுமை ஆட்டோவில் கடத்திய 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை அருகே சுமை ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

Updated On : 7 ஜூலை, 2013 at 11:10 AM
பகிர்:

நித்திரவிளை அருகே சுமை ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

 மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் சுகிபிரமிளா தலைமையில் துணை வட்டாட்சியர் அலெக்ஸாண்டர், வருவாய் ஆய்வாளர் செய்யதலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் சனிக்கிழமை இரவு நித்திரவிளை அருகே சின்னத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த சுமை ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினர். ஆட்டோ நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனர். இதையடுத்து, கிராத்தூர் பகுதியில் சென்றபோது ஆட்டோவை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடினார்.

 தொடர்ந்து அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 19 கேன்களில் மொத்தம் 700 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும், இவை மீனவர்களின் படகுகளுக்கு அரசு மானியவிலையில் வழங்கும் மண்ணெண்ணெய் என்பதும் தெரியவந்தது.

Advertisement

 மண்ணெண்ணெய்யுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த அதிகாரிகள், மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.