தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

குன்னூர் அருகில் உள்ள மஞ்சக்கம்பை பகுதியில் குடியிருப்புக்கு இடையேயும்,  பள்ளிக் கூடங்கள், பேருந்து நிறுத்தத்திற்கு  அருகிலேயும்,  இயங்கி வரும்  டாஸ்மாக் மதுபானக்கடையினை வேறு  இடத்திற்கு மாற்ற

JOHNSON

குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடையினை  அகற்றக் கோரி பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தினை  வலியுற்றுத்தியுள்ளனர்.

குன்னூர் அருகில் உள்ள மஞ்சக்கம்பை பகுதியில் குடியிருப்புக்கு இடையேயும்,  பள்ளிக் கூடங்கள், பேருந்து நிறுத்தத்திற்கு  அருகிலேயும்,  இயங்கி வரும்  டாஸ்மாக் மதுபானக்கடையினை வேறு  இடத்திற்கு மாற்ற இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

குன்னூர் அருகில் உள்ளது மஞ்சக்கம்பை பகுதி இங்கு நீலகிரி மாவட்டத்தில்  புகழ் மிக்க மஞ்சக்கம்பை கோயில், பள்ளிக்கூடம்,  மற்றும் பேருந்து நிறுத்தம், குடியிருப்புகளுக்கு இடையே அரசின் டாஸ்மாக் மதுக்கடை கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது,  இங்கு மது அருந்துபவர்கள் பள்ளிக்கு செல்பவர்களிடமும், மார்கெட் பகுதிக்கு வருபவர்களிடம், கோயிலுக்கு செல்பவர்களிடமும் இடையூறாக நடந்துக் கொள்வதாக கூறி இப்பகுதி மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு   மனு அளித்தனர், இதுவரை  மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும்  எடுக்காத காரணத்தினால் விரைவில் பள்ளி மாணவ,மாணவிரை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்தள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT