தற்போதைய செய்திகள்

சேலம் சிறையில் கைதி திடீர் சாவு

சென்னை மேற்கு மாம்பலம் பி.எஸ். நகரைச் சேர்ந்தவர் விஜயராம் மகன் மனோஜ்குமார் (24). கடந்த 2011-ஆம் ஆண்டில் நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் சிந்து, அவரது தாய் சத்தியவதி உள்ளிட்ட 3 பேரைக் கொலை

க. தங்கராஜா

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சென்னை மேற்கு மாம்பலம் பி.எஸ். நகரைச் சேர்ந்தவர் விஜயராம் மகன் மனோஜ்குமார் (24). கடந்த 2011-ஆம் ஆண்டில் நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் சிந்து, அவரது தாய் சத்தியவதி உள்ளிட்ட 3 பேரைக் கொலை செய்து, வீட்டில் இருந்த 28 பவுன் நகைகளைகொள்ளையடித்தது தொடர்பாக மனோஜ்குமார் அவரது கூட்டாளிகள் காமராஜ், இளங்கோவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கரூரில் 3 பேரைக் கொலை செய்து தங்க நகைகளைக் கொள்ளையடித்தது, பரமத்தி வேலூர், மல்லூர் உள்ளிட்ட இடங்களில் பூட்டை உடைத்துத் திருடியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளிலும் மனோஜ்குமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மனோஜ்குமார், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளுக்கான 8-வது பிளாக்கில் முதல் அறையில் இவர் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை மனோஜ்குமாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறை மருத்துவமனையில் அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர், தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மனோஜ்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர். வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT