முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜூலை 12-ல் சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை!

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகம் சொல்ல ஸ்ரீநடராஜப் பெருமான் தன்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:44 PM
பகிர்:

சிதம்பரத்தில் சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் குருபூஜை விழா ஜூலை 12 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகம் சொல்ல ஸ்ரீநடராஜப் பெருமான் தன் கைப்பட எழுதியதாக வரலாறு கூறுகிறது. அச்சிறப்பு வாய்ந்த ஸ்ரீமாணிக்கவாசகப் பெருமான் குருபூஜை விழா ஜூலை 12-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி சிவபூஜை வழிபாடு, சிறப்பு ஹோமம், திருவாசகம் முற்றோதல், சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மாகேஸ்வரபூஜை பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி வை.பசவராஜ், சு.சங்கரநடராஜ தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →