முகப்பு
தற்போதைய செய்திகள்

மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற வழக்குரைஞர்கள், இளவரசன் தாய் உள்பட உறவினர்கள் கைது

இந்நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்தினார் டிஎஸ்பி நடராஜன். இதனால் வாக்குவாதம் எழுந்தது. இதை அடுத்து, இளவரசன் உறவினர்கள், வழக்குரைஞர்கள் பிரதான நுழைவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:45 PM
பகிர்:

இளவரசன் உடல் வைக்கப்பட்டிருக்கும் தருமபுரி மருத்துவமனைக்குள் வழக்குரைஞர்கள் செங்கொடி, தமயந்தி ஆகியோர் உள்ளே புக முயன்றனர்.

முன்னதாக அவர்கள் நல்லக்கண்ணுவைச் சந்தித்து விட்டுவந்தனர். ஆனால், வளாகத்தில் போலீஸார் அதிகம் பேர் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்தினார் டிஎஸ்பி நடராஜன். இதனால் வாக்குவாதம் எழுந்தது. இதை அடுத்து, இளவரசன் உறவினர்கள், வழக்குரைஞர்கள் பிரதான நுழைவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இளவரசனின் தாய் கிருஷ்ணவேணி, தந்தை இளங்கோவன், வழக்கறிஞர்கள் தமயந்தி, செங்கொடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, வண்டியில் ஏற்றப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →