தருமபுரியில் லஞ்சம் வாங்கிய நகராட்சி நகரமைப்பு அலுவலர் கைது
தருமபுரியில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தருமபுரியில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கட்டிட அனுமதிக்காக அந்தோனி நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் வீடுகட்ட ரூ. 15 ஆயிரம் கேட்டிருந்தார் நகராட்சி நகரமைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் சக்திவேல் அவரிடம் ரூ. 10 ஆயிரம் கொடுத்தார். அதுவும் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பணியில் இருப்பதாகவும், அங்கே வந்து தருமாறும் கூறியிருந்தார். அந்த நேரம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரைக் கைது செய்தனர்.