முகப்பு
தற்போதைய செய்திகள்

வாணியம்பாடியில் 2 அம்மன் கோயில்களில் கொள்ளை முயற்சி.

வாணியம்பாடியில் 2 அóம்மன் கோயில்களின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நள்ளிரவில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:46 PM
பகிர்:

வாணியம்பாடியில் 2 அóம்மன் கோயில்களின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நள்ளிரவில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டையில் அழகுமாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்கள் அருகே அருகே அமைந்துள்ளது. வழக்கம் போல் வியாழக்கிழமை இரவு கோயில் பூசாரிகள் பூஜைகளை முடித்து பூட்டு விட்டு சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் அழகுமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் உண்டியலை உடைத்துள்ளனர். அதில் பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்தவர்கள் அருகில் உள்ள காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று மூலவர் அறையின் பூட்டை உடைக்க முயற்சி மேற்கொண்டு முடியாமல் போனதால் அப்படியே விட்டு சென்றனர். வெள்ளிக்கிழமை காலை சிலர் கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு வாணியம்பாடி நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாராணை செய்தனர். மேலும் வேலூரிலிருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர் ஆய்வாளர் செந்தாமரை வெள்ளிக்கிழமை மாலை அங்கு பதிவாகியுள்ள ரேகைகளை பதிவு செய்தார். கொள்ளை முயற்சி குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிந்து விசாராணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →