ஸ்ரீமாணிக்காவசகர் குருபூஜை: திரளான சிவனடியார்கள் பங்கேற்பு
சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீமாணிக்காவசக பெருமான் திருவாசகம் சொல்ல நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க இடமான சிதம்பரம் வேங்கான்தெரு திருபாற்கடல் மடத்தில்
சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீமாணிக்காவசக பெருமான் திருவாசகம் சொல்ல நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க இடமான சிதம்பரம் வேங்கான்தெரு திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீமந் ஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
திரளான சிவனடியார்கள் குருபூஜையில் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் செய்து வழிபட்டனர். முன்னதாக சிவபூஜை வழிபாடு மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் மற்றும் ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீமந் ஆத்மநாதர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிச்சித்தனர். பின்னர் வடக்குவீதி நடராஜ க்ருபா மண்டபத்தில் மாகேஸ்வரபூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி வை.பசவராஜ், சு.சங்கரநடராஜ தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.