காட்டுமன்னார்கோயிலில் தீவிபத்து: 31 வீடுகள் எரிந்து சேதம்
காட்டுமன்னார்கோயில் அருகே வடவாறு கரையோரம் உள்ள காந்தியார்தெருவில் இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் வடிவேலு என்பவரது வீட்டில் சனிக்கிழமை மதியம்
காட்டுமன்னார்கோயில் அருகே இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 31 வீடுகள் எரிந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமுற்றன.
காட்டுமன்னார்கோயில் அருகே வடவாறு கரையோரம் உள்ள காந்தியார்தெருவில் இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் வடிவேலு என்பவரது வீட்டில் சனிக்கிழமை மதியம் சமையல் செய்யும் போது கூரையில் திடீரென தீப்பிடித்தது. காற்றில் தீ மேலும் பரவி அருகாமையில் இருந்த மொத்தம் 31 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமுற்றன.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமுற்றன. தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி, வட்டாட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களை காட்டுமன்னார்கோயிலில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.