திமுகவில் இணைந்த காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் டி.ராஜவன்னியன்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியரும், பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினருமான பேராசிரியர் டி.ராஜவன்னியன்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியரும், பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினருமான பேராசிரியர் டி.ராஜவன்னியன் தலைமையில் 200 பேர் திமுகவில் இணைந்தனர்.
சிதம்பரம் நகருக்கு சனிக்கிழமை வருகை தந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேராசிரியர் டி.ராஜவன்னியன் தலைமையில் அண்ணாமலைநகர் பேரூராட்சி மதிமுக முன்னாள் பொருளாளர் ஆர்.குணசேகரன் மற்றும் காங்கிரஸ், அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 200 பேர் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தார்.
பேராசிரியர் டி.ராஜவன்னியன் 1972 முதல் 74 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழக திராவிட மாணவர் கழகத் தலைவராக இருந்துள்ளார். 2000 ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 12 ஆண்டுகளும், சிண்கேட் உறுப்பினராக 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.கே.மூப்பனாரின் விசுவாசியான இவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.