முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பிடிஎஸ், பிபிடி, பி.பார்ம் படிப்புகளுக்கு 2-ம் கட்ட கவுன்சிலிங்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான முதல் கட்ட கவுன்சிலிங்கில் எம்பிபிஎஸ் 150 இடங்களுக்கு 149 பேருக்கு அனுமதி சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. எஸ்டி வகுப்பினருக்கான

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:49 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் பிடிஎஸ், பிபிடி, பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங் ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கைக்காக 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17,18,19 தேதிகளில் நடைபெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான முதல் கட்ட கவுன்சிலிங்கில் எம்பிபிஎஸ் 150 இடங்களுக்கு 149 பேருக்கு அனுமதி சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. எஸ்டி வகுப்பினருக்கான ஒரு இடம் காலியாக உள்ளது. பிடிஎஸ் படிப்பிற்கான 100 இடங்களுக்கு 50 பேருக்கு அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம் 50 இடங்கள் உள்ளன. பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் தலா 100 இடங்களுக்கு 1 இடத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம் 99 இடங்கள் காலியாக உள்ளன. பிபிடி (பேட்சுலர் ஆஃப் பிசியோதெரபி) படிப்பிற்கான 30 இடங்களுக்கு 1 இடத்திற்கு அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம் 29 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள மருத்துவப் படிப்பிற்கு 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17,18, 19 தேதிகளில் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →