மயக்க மருந்து கொடுத்து டிரைவரை கட்டிப்போட்டு கார் திருட்டு
கால் டாக்சி டிரைவரை கட்டிப்போட்டுவிட்டு காரை 4 நபர்கள் திருட்டு போனது சம்பந்தமாக ஆம்பூர் தாலுகா போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.
கால் டாக்சி டிரைவரை கட்டிப்போட்டுவிட்டு காரை 4 நபர்கள் திருட்டு போனது சம்பந்தமாக ஆம்பூர் தாலுகா போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் கால் டாக்சி டிரைவர் வெங்கடேசன் (44). இவரிடம் திங்கள்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு 4 நபர்கள் தொடர்பு கொண்டு சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல வேண்டுமென வாடகைக்கு காரை கேட்டுள்ளனர். அதற்கு ஒப்புகொண்டு 4 நபர்களையும் அழைத்துக் கொண்டு பெங்களூர் நோக்கி சென்றுள்ளார். வேலூரை கடந்து வல்லண்டராமம் வந்தபோது சாலையோரம் காரை நிறுத்தி 4 நபர்களும் சாப்பிட்டுள்ளனர். டிரைவர் வெங்கடேசனுக்கும் சாப்பிட உணவு கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வெங்கடேசனுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மயங்கியுள்ளார்.
அதன்பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை அவருக்கு விழிப்பு வந்தபோது ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமத்தில் சாலையோரம் இருந்த மாந்தோப்பில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளார். உணவில் மயக்க மருந்து கொடுத்து தான் மயக்கமடைந்த பிறகு அந்த நபர்கள் காரை திருடிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஆம்பூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார்.
Advertisement