தற்போதைய செய்திகள்

நாங்குநேரி வட்டாட்சியர் தாக்கப்பட்டதை கண்டித்து,ஆலங்குளத்தில் வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில்,வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து,ஆலங்குளத்தில்,வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாலை வருவாய்த்துறையினர் கண்டன

V.RAMACHANDRAN

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில்,வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து,ஆலங்குளத்தில்,வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாலை வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கல்யாண்குமார் தலைமை வகித்தார்.வட்டாட்சியர் செந்திவேல்,தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஹபிபுர்ரகுமான்,வட்ட வழங்கல் அலுவலர் ஆறுமுகநயினார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு சான்று வழங்கும் துணை வட்டாட்சியர் ரவீந்திரன்,சிறப்பு துணை வட்டாட்சியர் கலைமதி,குடிமைப்பொருள் ஆய்வாளர் கார்த்திகேயன்,உதவியாளர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில்,வட்டாட்சியரை தாக்கியவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும்,காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுப்பதோடு,பணி பாதுகாப்பும் வழங்கவேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ. 91.01 ஆக நிறைவு!

ராஜஸ்தானில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 42 லட்சம் பேர் நீக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்னேஷ் புத்தூர்!

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT