முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தேமுதிகவினர் 162 பேர் கைது

விருதுநகரில் பொய்வழக்கு போடும் தமிழக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 162 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:21 PM

விருதுநகரில் பொய்வழக்கு போடும் தமிழக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 162 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பொய்வழக்கு போடும் தமிழக அரசைக் கண்டித்து தேசபந்து மைதானத்தி்ல ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிகவின் மாவட்ட செயலாளர் வைரமுனி தலைமை வகித்தார். இதில், தொடர்ந்து தமிழக அரசு பொய்வழக்கு போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். அப்போது, விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தேமுதிகவினர் 162 பேரையும் கைது செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.