முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே குடிபோதையில் கத்தியால் குத்தியவர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(50). இவரது பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த ராமர்(45). இவர் புதன்கிழமை இரவு அதிகமாக மதுக்குடித்து விட்டு வந்து தெருவில் பெண்கள் நடந்து போகும் போது தகாத வார்த்தைகள் பேசியுள்ளார்.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:21 PM

விருதுநகர் அருகே குடிபோதையில் தகாத வார்த்தைகள் பேசியவரை தட்டுக் கேட்டவரை கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது:

விருதுநகர் அருகே காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(50). இவரது பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த ராமர்(45). இவர் புதன்கிழமை இரவு அதிகமாக மதுக்குடித்து விட்டு வந்து தெருவில் பெண்கள் நடந்து போகும் போது தகாத வார்த்தைகள் பேசியுள்ளார்.

Advertisement

இது குறித்து தட்டிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்த ராமர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணியனை குத்தி படுகாயப்படுத்தினார். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதன் பேரி்ல்  வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

அரசு பஸ் மோதி மொபைட்டில் சென்றவர் சாவு: அருப்புக்கோட்டை வழாவந்தான் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேல்(50). இவர் புதன்கிழமை இரவு சென்னல்குடி-மலைப்பட்டி சாலையில் மொபைட்டில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது மலைப்பட்டியிலிருந்து விருதுநகர் நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாரத விதமாக மொபைட் மீது மோதியதில் தூக்கியெறியப்பட்டார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே செந்தில்வேல்(45) உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் ராஜ்குமார் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து அப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் பாலாஜி மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.