முகப்பு
தற்போதைய செய்திகள்

தாய்,மகனை தாக்கிய இருவர் கைது..

அவனியாபுரத்தில் தாய்,மகனை தாக்கிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:52 PM
பகிர்:

அவனியாபுரத்தில் தாய்,மகனை தாக்கிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

அவனியாபுரம் வெள்ளானந்தபுரத்தை சேர்நதவர் செல்லம்மாள்(60)கடந்த புதன்கிழமை இரவு இவரது வீட்டின் முன்பு சிலர் வழியை மறித்துக்கொண்டு அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனராம்.இவர்களை அவ்விடத்தை விட்டு செல்லுமாறு கூறிய செல்லமாளையும் அவரது மகன் கனகராஜையும் 3 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து செல்லமாள் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து அவனியாபுரம் பாரதியார் தெருப் பகுதியை சேர்ந்த நாகேந்திரபிரபு(19), கந்தராஜ்(19)ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சசி என்பவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.