ஆடிட்டர் ரமேஷ் உடலுக்கு தொண்டர்கள் அஞ்சலி
இதனிடையே ரமேஷ் கொலை தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், கொலைக்கான பின்னணி குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை; விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்றனர்.
தற்போதைய செய்திகள்ஆடிட்டர் ரமேஷ் உடலுக்கு தொண்டர்கள் அஞ்சலி
இதனிடையே ரமேஷ் கொலை தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், கொலைக்கான பின்னணி குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை; விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்றனர்.
சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷின் உடலுக்கு கட்சித் தொண்டர்கள், இந்து அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக அவரது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து வீட்டுக்கு எடுத்துவரப்பட்டது. அப்போது ஊர்வலமாக எடுத்துவர போலீஸார் அனுமதிக்கவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு, முக்கியமான சில தெருக்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகள் முடிந்து, பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அலுவலகத்துக்கு தொண்டர்களின் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோர் வருவதாகவும் அதன்பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் அங்குள்ளோர் தெரிவித்தனர்.
இதனிடையே ரமேஷ் கொலை தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், கொலைக்கான பின்னணி குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை; விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்றனர்.