ஆடிட்டர் ரமேஷ் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு: பேச்சுவார்த்தை தீவிரம்
சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.
தற்போதைய செய்திகள்ஆடிட்டர் ரமேஷ் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு: பேச்சுவார்த்தை தீவிரம்
சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.
சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.
இதனிடையே முக்கிய வீதிகள் வழியாக அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு போலீஸாருடன் முக்கியப் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரமேஷ் உடலுக்கு பாஜக தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை வரை அவரது உடல் கட்சியினர் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இதனிடையே பாஜக தலைவர்கள் வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வருகின்றனர். அதன்பின்னர், இன்று மாலை சேலம் அஸ்தம்பட்டி மயானத்தில் ரமேஷ் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.