இந்து அமைப்பினர் தங்கள் பாதுகாப்புக்கு ஆயுதம் எடுத்துச் செல்லும் நிலை உருவாகும்: பொன்.ராதாகிருஷ்ணன்
* வரும் 22ம் தேதி இந்தப் படுகொலையைக் கண்டித்து மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும், இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.* தமிழகத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இது மிகவும் விபரீதமானது. தமிழக அரசு உடனே குற்றவாளிகளைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய செய்திகள்இந்து அமைப்பினர் தங்கள் பாதுகாப்புக்கு ஆயுதம் எடுத்துச் செல்லும் நிலை உருவாகும்: பொன்.ராதாகிருஷ்ணன்
* வரும் 22ம் தேதி இந்தப் படுகொலையைக் கண்டித்து மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும், இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.* தமிழகத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இது மிகவும் விபரீதமானது. தமிழக அரசு உடனே குற்றவாளிகளைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு ஆயுதம் எடுத்துச் செல்லும் உருவாகியுள்ளது என்றார் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.
சேலத்தில் நேற்று இரவு மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சேலம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்...
வரும் 22ம் தேதி இந்தப் படுகொலையைக் கண்டித்து மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும், இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இது மிகவும் விபரீதமானது. தமிழக அரசு உடனே குற்றவாளிகளைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய சூழ்நிலை நீடித்தால், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயுதம் ஏந்தியே நடமாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது நல்ல போக்கு அல்ல.
இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
- என்று கூறினார்.
சேலத்தில் மரவநேரி சாலையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சேலம் மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த அறிக்கையில்...
கடந்த ஓர் ஆண்டிற்குற்கு மேலாக தமிழகத்தில் இந்து இயக்கத் தலைவர்களும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் படுகொலைகளுக்கும் ஆயுதத்தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். இதை தடுக்க வேண்டிய தமிழக காவல் துறை அலட்சியமாக இருக்கின்ற காரணத்தால் படுகொலைகள் தொடர்கின்றன.
நேற்று படுகொலை செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர்.ஏ.ரமேஷ் அனைத்து தரப்பு மக்களின் அன்பிற்கு பாத்திரமானவர்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஏ.ரமேஷின் கார் அவரது வீட்டில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது. அப்போதே ஏ.ரமேஷுக்கு போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் தற்போது இக்கொலை நடந்திருக்காது. கடந்த 1ஆம் தேதி வேலூரில் இந்து முன்னனி மாநில செயலாளர் வெள்ளையப்பன் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போதாவது ஏ.ரமேஷுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அவர் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.
4 மாதங்களுக்கு முன்பு பரமக்குடியில் முன்னாள் பாஜக கவுன்சிலர் முருகன் நடுப்பகலில் சந்தை பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டார். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக வேலூரை சார்ந்த பாஜக தலைவர் அரவிந்தரெட்டி மக்கள் கூடி இருக்கும் கடைவீதிப் பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஊட்டி, குன்னூர், கோவை பகுதியில் இந்து முன்னனி தலைவர்கள் வெட்டப்பட்டார்கள். மேட்டுப்பாளையத்தில் பாஜக பொறுப்பாளர் ஆனந்த் வெட்டப்பட்டார். நாகர்கோவிலில் காந்தி வெட்டப்பட்டார். காரைக்குடியில் ராஜா மாநில துணைத்தலைவர் வீடு தாக்கப்பட்டது.
இது போன்ற பயங்கரவாதிகளின் கொலை மற்றும் தாக்குதல் சம்பவத்தில் எந்த குற்றவாளியும் முறையாக கைது செய்யப்படாததாலும் பாஜக மற்றும் இந்து இயக்கத் தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படாததாலும் இன்று பாஜக தலைவர் ஏ.ரமேஷ் கொல்லப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் இக்கொலை வெறி தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஜுலை 22ம் தேதி திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகள்,; வணிகப்பேரவை மற்றும் தொழில்நிறுவனங்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை தறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- என்று கூறியுள்ளார்.