முகப்பு
தற்போதைய செய்திகள்

ரமேஷ் கொலையாளிகளை கண்டறிய முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: வெங்கய்ய நாயுடு

ரமேஷைக் கொன்ற குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுவரை இந்து இயக்கத்தவர்கள் கொலை செய்யப்பட்டதில் குற்றவாளிகளைக் கண்டறிவதில் மெத்தனமாக இருந்தது போல், ரமேஷ் கொலையையும் அப்படியே விட்டுவிடாமல் போலீஸார் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு 20 மணி நேரம் ஆனபின்னும் கொலையாளிகள் இனம் காணப் படவில்லை, அதற்கு முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார் பாஜக தலைவர் வெங்கய்ய நாயுடு.

இன்று சேலம் வந்த அவர், ரமேஷ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசியபோது,

ரமேஷைக் கொன்ற குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுவரை இந்து இயக்கத்தவர்கள் கொலை செய்யப்பட்டதில் குற்றவாளிகளைக் கண்டறிவதில் மெத்தனமாக இருந்தது போல், ரமேஷ் கொலையையும் அப்படியே விட்டுவிடாமல் போலீஸார் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

இதில், முதல்வர் தலையிட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 மணி நேரம் ஆன பின்பும் யாரும் அடையாளம் காணப்படவில்லை

என்பது கண்டனத்துக்குரியது என்றார்.

ரமேஷின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. சேலம் சின்னத்திருப்பதி மாநகராட்சி மயானத்தில் எரியூட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ரமேஷின் உடலுக்கு அவரது தம்பி சேஷாத்ரி எரியூட்டுகிறார்.

முன்னதாக ரமேஷ் உடலுடன் பாஜகவினர் ஊர்வலமாக வந்தனர். அதில், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், வானதி சீனிவாசன் ஆகியோர் நடந்து வந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →