கர்நாடக அணைகள் நிரம்பின : காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாட மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பிவிட்டதால் காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 79,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
தற்போதைய செய்திகள்கர்நாடக அணைகள் நிரம்பின : காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாட மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பிவிட்டதால் காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 79,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாட மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பிவிட்டதால் காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 79,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணை அதன் முழு கொள்ளளவான 124 அடியை எட்டிவிட்டது. இதனால், அணைக்கு வரும் 46 ஆயிரம் கன அடி நீரும், அப்படியே காவிரியில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
அதேப்போல, கபினி அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால், பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் 33 ஆயிரம் கன அடி தண்ணீரும், காவிரியில் உபரி நீராக திறந்துவிடப்பட்டுள்ளது.
இவ்விரண்டு அணைகளிலும் திறந்தவிடப்பட்டுள்ள 79 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் கரைபுரண்டு வெள்ளமாக ஓடி, நாளை மாலை மேட்டூர் அணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.