சரக்கு லாரி வேலைநிறுத்தம் தாற்காலிகமாக வாபஸ்: கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் தொடரும்
கேரளாவுக்குச் செல்லும் சரக்கு லாரிகள் போக்குவரத்தில் சுங்கச்சாவடியில் கெடுபிடி, தாமதம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கேரள முதல்வர்
கேரளாவுக்குச் செல்லும் சரக்கு லாரிகள் போக்குவரத்தில் சுங்கச்சாவடியில் கெடுபிடி, தாமதம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கேரள முதல்வர் உம்மன்சாண்டி காணொலிக் காட்சி மூலம் பேச்சு வார்த்தை நடத்தினார். மோட்டார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சண்முகப்பா, மாவட்ட ஆட்சியர் அக்தர் அலி பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட்டது.
ஆக.20 வரை காலக் கெடு தரப்பட்டுள்ளது. இதன்படி வாளையார் சோதனைச் சாவடியில் லாரிகள் செல்வதற்கு நான்கு வழி சாலை வசதி, நவீன ஸ்கேனர் ஆகியவை பொருத்தப்பட வேண்டும். அந்த இடத்தை அரை மணி நேரத்துக்குள் லாரி கடந்து செல்ல வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். மேலும், ரூ. 2 லட்சத்துக்கு மேல் மதிப்பு கொண்ட சரக்கு இருந்தால் லாரி, வாளையார் சோதனைச் சாவடி வழியாக மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதைத் தளர்த்தி மற்ற சோதனைச் சாவடிகள் வழியாகவும் செல்ல வழி செய்ய வேண்டும்.
இந்தக் கோரிகைகளை ஒரு மாத காலக் கெடுவுக்குள் நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று மோட்டார் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதனை நிறைவேற்றித் தருவதாக மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தாற்காலிகமாக வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.