திருத்துறைப்பூண்டியில் வர்த்தகர்கள் சாலைமறியல்
திருத்துறைப்பூண்டியில் இன்று பாஜகவினர் நடத்தும் கடையடைப்புக்கு ஆதரவு தரக் கோரி, கடைவீதியில் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்தினர். இதனால் வர்த்தகர்களுக்கும் பாஜகவினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, பாஜகவினரின் செயலைக் கண்டித்து வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் வர்த்தகர்கள் பழைய பேருந்து நிலையத்தின் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், இந்தச் சம்பவத்தில், கொலையாளிகளை தமிழக அரசு உடனே கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.