வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இலங்கை அகதிகள்
காட்டுமன்னார்கோயில் இலங்கை அகதிகள் முகாமில் 1990 ஆண்டு முதல் 75 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனம் உதவியுடன் புதிய குடியிருப்பு கடந்த திமுக
கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததை கண்டித்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மக்கள் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோயில் இலங்கை அகதிகள் முகாமில் 1990 ஆண்டு முதல் 75 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனம் உதவியுடன் புதிய குடியிருப்பு கடந்த திமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பில் கழிவுநீர் வெளியேறாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் வடிகால் வசதி செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 40 பெண்கள் உள்ளிட்ட மக்கள் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வட்டாட்சியர் வெங்கடாசலம், பேரூராட்சி செயலர் அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 தினங்களுக்கு கழிவுநீர் வடிகால் வசதி செய்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்று முகாமிற்கு திரும்பினர்.