தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களில் ஆட்சியர் ஆய்வு

இம்மாவட்ட பகுதியில் உள்ள அல்லாலப்பேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் அதிகாரிகளுடன் சென்றார். அங்கு சமையல் கூடத்தை சுற்றிப்பார்த்தார். பின்னர் அங்கு

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களில் மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவு தாயரித்து வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இம்மாவட்ட பகுதியில் உள்ள அல்லாலப்பேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் அதிகாரிகளுடன் சென்றார். அங்கு சமையல் கூடத்தை சுற்றிப்பார்த்தார். பின்னர் அங்கு சமையல் செய்து தயாரான  உணவு பொருள்களை பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த முட்டைகள் தரமாக இருக்கிறதா என்பதை தண்ணீரில் போட்டு சோதனை செய்தார். அதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து முட்டைகளை வாங்கி வரும் போது தரமான முட்டைகள் வழங்கப்படுகிறா என்பதை பார்த்து வாங்கி வரவேண்டும். நம் வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு சமையல் செய்து மனநிறைவோடு பரிமாறுவது போல் ஊழியர்கள் பரிமாற வேண்டும்.

மேலும், பள்ளிகளுக்கு வந்துள்ள மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவேடுகளின் அடிப்படையில் எண்ணிக்கைகேற்ப உணவு பொருள்களான அரிசி, பருப்பு, முட்டை, காய்கறிகள் ஆகியவைகளை சமைக்க வேண்டும். அதேபோல், சமைப்பதற்கு முன்பு அரிசி, பருப்புகளை நன்றாக சுத்தம் செய்த பின்னரே சமையலில் ஈடுபட வேண்டும். அதிலும், திறந்த வெளியிலும், தூசி பறக்கும் இடங்களிலும் பாத்திரங்களை மூடி வைத்து சமைக்க வேண்டும். முதலில் சமைத்த உணவு பதார்த்தங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சாப்பிட்ட பின்னரே  சரியாக இருந்தால் மட்டுமே மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும். அதையடுத்து வல்லப்பன்பட்டி உயர் நிலைப்பள்ளியில் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை சாப்பிட்டு பார்த்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் ஆய்வு செய்தார்.

அப்போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி, கோட்டாட்சியர் குணசேகரன், காரியாபட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமமூர்த்தி, அல்லாலப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி.பரமேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT