இளம்பெண்ணைக் கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற 5 பேருக்கு இரட்டை ஆயுள்
நெய்வேலி டவுன்ஷிப்பைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவரின் மகள் கவிதா தான் வேலை செய்யும் பேக்கரியில் இருந்து கடந்த 2011 ஏப்.26 அன்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 5 பேர் அவரைக் கடத்தினர்.
நெய்வேலி டவுன்ஷிப்பைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவரின் மகள் கவிதா தான் வேலை செய்யும் பேக்கரியில் இருந்து கடந்த 2011 ஏப்.26 அன்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 5 பேர் அவரைக் கடத்தினர். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று புதைத்தனர். இது குறித்து நெய்வேலி தெர்மல் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
கடலூர் மகளிர் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு, பத்திரக் கோட்டையைச் சேர்ந்த தவமணி, சுப்புராஜ். கிருஷ்ண ராஜ், பிரகாஷ். சுதந்திரராஜன் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். அவர்கள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் வந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, குற்றவாளிகள் 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினர்.