முகப்பு
தற்போதைய செய்திகள்

டிக்கெட் கொடுப்பதில் தாமதம்: ரயில்வே நிலைய அதிகாரி மீது தாக்குதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ரயில்நிலைய அதிகாரி திருஞானசம்பந்தன்(23) தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

தற்போதைய செய்திகள்

டிக்கெட் கொடுப்பதில் தாமதம்: ரயில்வே நிலைய அதிகாரி மீது தாக்குதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ரயில்நிலைய அதிகாரி திருஞானசம்பந்தன்(23) தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:56 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ரயில்நிலைய அதிகாரி திருஞானசம்பந்தன்(23) தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை சூளூர்பேட்டை முதல் சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் செல்ல டிக்கெட் கேட்டு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்திருக்கிறார். அப்போது எதிர்புறமாக சூளுர்பேட்டை நோக்கி மின்ரயில் செல்ல வந்ததால் அந்த நபரை காத்திருக்கும்படியும் மின்ரயில் சென்றதும் டிக்கெட் தருகிறேன் என நிலைய அலுவலர் திருஞானசம்பந்தம் தெரிவித்து இருக்கிறார்.

அதற்கு டிக்கெட் வாங்க வந்த நபர் டிக்கெட் நபர் ரயில்வே நிலைய அதிகாரியிடம் வாய் தகராறில் ஈடுபட்டதும் சிறிது நேரம் கழித்து நிலைய அலுவலர் அந்த நபருக்கு டிக்கெட் தந்திருக்கிறார். அப்போது அந்த நபர் இங்கே தானே இருப்பாய், மாலை வேலை முடிந்து வந்ததும் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டி இருக்கிறார்.

தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அந்த நபர் ரயில் நிலைய அலுவலரின் அறைக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரிடம் இருந்த பணத்தை பறித்து அங்கிருந்து தப்பிக்க முயல்கையில் ரயில் நிலைய அலுவலரும், இன்னொரு பெண் ஊழியரும் அந்த நபரை தடுத்து அவரிடம் இருந்து ரூபாய் 4 ஆயிரத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்ததும் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் ஆரம்பாக்கம் ரயில் நிலைய அதிகாரி திருஞானசம்பந்தனிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →