தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 14 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.59 லட்சம் மதிப்
தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.59 லட்சம் மதிப்புள்ள 182 பவுன் நகை மீட்கப்பட்டது. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் உயரதிகாரிகள், வெகு நாட்களாகத் தேடப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.