முகப்பு
தற்போதைய செய்திகள்

அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஆக.10-ம் தேதிக்கு மாற்றம்: வைகோ

அணு உலையை நிரந்தரமாக மூடக் கோரி சென்னையில் ஆக.5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:57 PM
பகிர்:

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

அணு உலையை நிரந்தரமாக மூடக் கோரி சென்னையில் ஆக.5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.ஆனால், வேறு தேதியில் நடத்துமாறு தூத்துக்குடி மக்கள் கோரினர்.இதனையேற்று, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆக.10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு உணர்வாளர்களும், தென்தமிழ் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் உணர்வு உடையோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பர் என அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →