தற்போதைய செய்திகள்

விருதுநகர் பகுதியில் தனியார் தொலைபேசி டவர்களில் பேட்டரிகள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

மதுரை அருகே பசும்பொன்நகரைச் சேர்ந்தவர் சாந்தகுமார்(25). இவர் தனியார் தொலைபேசி நிறுவனத்தில் விருதுநகர் பகுதியின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மாதந்தோறும்

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் தனியார் தொலைபேசி டவரில் உள்ள பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

மதுரை அருகே பசும்பொன்நகரைச் சேர்ந்தவர் சாந்தகுமார்(25). இவர் தனியார் தொலைபேசி நிறுவனத்தில் விருதுநகர் பகுதியின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மாதந்தோறும் தொலைபேசி டவர்களுக்குச் நேரில் சென்று பார்வையிடும் பணியை மேற்கொண்டுள்ளார்.அதேபோல், விருதுநகரில் இன்று இம்மாதத்திற்கான பணியை மேற்கொள்வதற்காக வந்தாராம். அப்போது, விருதுநகர் நான்கு வழிச்சாலையிலும், அல்லப்பட்டி பகுதியிலும் பார்வையிட்டுள்ளார். அப்போது, ஜெனரேட்டர் அருகே இருந்த தலா ரூ.8 மதிப்பிலான 2 பாட்டாரிகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றி்ருந்தனர். உடனே இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்திலும், பாண்டியன் நகர் காவல் நிலையத்திலும் மேற்பார்வையாளர் சாந்தகுமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிராமாக விசாரணை செய்து வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT