முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.1000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

திருவாருர் மாவட்டம் திருதுறைப்பூண்டி தாலுகா எடையூரில்  கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றுபவர் ஜி.ராமகிருஷ்ணன். அவரிடம் அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:58 PM
பகிர்:

திருவாருர் மாவட்டம் திருதுறைப்பூண்டி தாலுகா எடையூரில்  கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றுபவர் ஜி.ராமகிருஷ்ணன். அவரிடம் அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தனது மகள் திருமண உதவி தொகை வேண்டி  சான்றிதல் கேட்டு அனுகியுள்ளார். சான்றிதழ் வழங்க ராமகிருஷ்ணன் ரூ.1000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத திருநாவுக்கரசு நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து திருநாவுக்கரசு லஞ்ச பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த டி.எஸ்.பி. ரத்னவேல் தலைமையிலான போலீஸார்  ராமகிருஷ்ணனை கையும்,களவுமாக பிடித்து கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →