தற்போதைய செய்திகள்

சாலை, கோயில் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் சாலையோரங்கள் மற்றும் கோயில் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வட்டாட்சியர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது: இந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத அளவிற்கு வருவாய் துறை, காவல் துறை அலுவலர்கள் இணைந்து செயல்படுவது அவசியமாகும். பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் அரசு மதுபானக் கடைகள் இருந்தால் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.அதேபோல், சாலையோரங்கள், போக்குவரத்து நெரிசலான பகுதிகள் மற்றும் திருக்கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே இதுபோன்ற குறிப்பிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனே அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையும், வருவாய் வட்டாட்சியரும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நெடுஞ்சாலைப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேகத்தடைகளால் அதிகளவு விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டுநர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனவே இந்த விபத்துக்களை தடுப்பதற்கு வேகத்தடை அமைத்துள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலும், வர்ணம் பூசவும் நெடுஞ்சாலை பொறியாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதையடுத்து, சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆகியோர் தங்களது நோக்கத்திற்கு மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே யாரும் அகற்ற முடியாத அளவில் நிரந்தர சாலை தடுப்புகளை நெடுஞ்சாலைத்துறை ஏற்படுத்த வேண்டும்.

அதோடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுகின்றவர்கள் வாகன தணிக்கையின் போது பிடிபட்டால் உடனே உரிமத்தை ரத்து செய்வதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கிராமங்கள் தோறும் திறந்த வெளிக்கிணறுகள் எத்தனை உள்ளது என்பதை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் மூலம் உடனடியாக கணக்கெடுப்புச் செய்து மூடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஊராட்சிகள் உதவி இயக்குநர் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.இம்மாவட்டத்தில் உள்ள சமூக தலைவர்களுடைய சிலைகளுக்கு இரும்பு தடுப்பு வேலி போட்டு, பராமரித்து வருகிறவர்கள் சாவியை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதுவரையில் கம்பி வலை அமைக்காமல் இருந்தால், உடனே அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் குணசேகரன், ரெங்கன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அருமைநாயகம் வரகுணராஜ், உதவி இயக்குநர்(கலால்) பூமி, வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி மற்றும் போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT