தொழில் பகை காரணமாக மதுரையில் உள்ள சிடி விற்பனை செய்யும் கடையில் போதைப் பொருள் வைத்து காவல்துறையிடம் மாட்டிவிட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சிடி விற்பனை செய்யும் கடையில் கடந்த 6.7.2013 அன்று போதைப் பொருள் இருப்தாக போதைப் பொருள் நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் அங்கு சோதனை செய்ததில், கடையில் இருந்து அரைக் கிலோ போதைப் பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடையின் பங்குதாரர்களில் ஒருவரான பாலன், லதா, ராமநாதன் ஆகியோரிடம் விசாரணை செய்ததில், கடைக்கு வந்த யாரோ வைத்துவிட்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் விடுவித்த போதைப் பொருள் நுண்ணறிவு போலீசார், தொடர்ந்து சோதனை செய்ததில், தொழில் போட்டியில் வேண்டும் என்றே அந்த போதைப் பொருளை யாரோ வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த வீடியோ சிடிக்களை விற்பனை செய்து வரும் காஜா மொய்தீன் (43) மற்றும் அவருக்கு உதவியதாக துத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தாலுகா, சிலுவையாபுரத்தைச் சேர்ந்த நல்லமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்னர். இவர்கள் தான் அந்த போதைப் பொருளை கடையில் வைத்தது தெரிய வந்தது.
காஜா மொய்தீன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளன. இவர் திருட்டு சிடி விற்பனை செய்து வந்துள்ளார். பாலன் உரிமம் பெற்று சிடிக்களை விற்று வருகிறார். இதற்கிடையே, போலி சிடிக்கள் விற்பது குறித்து பாலன், காஜா மொய்தீன் பற்றி போலீசில் காட்டிக் கொடுப்பதால் அதற்கு பழி வாங்குவதற்காக காஜா மொய்தீன் இவ்வாறு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட காஜாமொய்தீன் கடையில் வேலை பார்க்கும் அபுபக்கர், ஷேக மொகம்மது, சகோதரர் யூசுப், கடை மேலாளர் கோவிந்தராஜ், ஸ்கூல் வேன் ஓட்டுநர் ஷேக், நல்லமுத்துவின் நண்பர் அழகுபாண்டி, இவர்களுக்கு உடந்தையாக இருந்த கான்ஸ்டபிள் லட்சுமணன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
இதனை போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு டிஐஜி ஜான் நிக்கல்சன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.