முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும் நுழைவுத் தேர்வு ஏன்?: கருணாநிதி

பொது நுழைவுத் தேர்வே கூடாது என்று கூறும் தமிழக அரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:02 PM
பகிர்:

பொது நுழைவுத் தேர்வே கூடாது என்று கூறும் தமிழக அரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரான் சிறையில் வாடும் 16 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் பாராட்டுகிறேன்.மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை நானும் (கருணாநிதி) வலியுறுத்துகிறேன். ஈரானில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை மத்திய அரசு செலுத்த முன்வராவிட்டாலும்கூட,  தமிழக அரசே செலுத்தி, மீனவர்களைத் தாயகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக மீனவர்களின் குடும்பத்தினர் ஜூலை 24-ம் தேதி மனு அளித்த பிறகே தனக்குத் தெரிய வந்ததாக முதல்வர் கூறியுள்ளார். இந்த விவகாரம் 6 மாத காலமாக நடைபெற்று வருகிறது.

மீனவளத் துறைக்கு என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்கின்றனர். அவர்கள் ஏன் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவில்லைபொது நுழைவுத் தேர்வு: மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர்.இதனை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.இந்த முடிவைக் கைவிடக் கோரிக்கு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.இதுவும் பாராட்டத்தக்கதுதான்.அதே சமயம் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து தீர்ப்பு வெளியானது ஜூலை 18-ஆம் தேதி. மறு ஆய்வு கோரப் போவதாக குலாம் நபி ஆசாத் கூறியது ஜூலை 21-ஆம் தேதி.

குலாம் நபி ஆசாத் கருத்துக்கு ஜூலை 22-ம் தேதி நானும் கண்டனம் தெரிவித்துள்ளேன்.ஆனால் இது தொடர்பாக பிரதமருக்கு ஜூலை 29-ம் தேதியன்று முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் இரண்டு முடிவுகளையும் வரவேற்கும் நிலையில், ஏன் இந்தத் தாமதம் என்றும் கேட்கத் தோன்றுகிறது.மேலும், நுழைவுத் தேர்வே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும் நுழைவுத் தேர்வை நடத்த முற்பட்டது ஏன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →