முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டி அருகே 5 கூரை வீடுகள் எரிந்து நாசம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:02 PM
பகிர்:

பண்ருட்டி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து நாசமாயின.

பண்ருட்டி அருகே உரையூர் கிராமத்தில் ஏராளமான கூரை வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு கூரை வீட்டில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டது. உடனே தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில் 5 கூரை வீடுகள் எரிந்து நாசமாயின.

இச்சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீஸார் வழக்குப்திவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 5 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →