முகப்பு
தற்போதைய செய்திகள்

பாசன வாய்க்காலில் சிறுபாலம் கட்ட ரூ.20 ஆயிரம் லஞ்சம்: உதவிப் பொறியாளர் கைது

சென்னையைச் சேர்ந்த முகமதுஉசேன் நூராணி. இவர் கடலூர் மாவட்டம்  சேத்தியாத்தோப்பு கூட்டுரோடு அருகே வடலூர் ரோட்டில் புதிதாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:02 PM
பகிர்:

சிதம்பரம் அருகே பாசன வாய்க்காலில் சிறுபாலம் (கல்வெர்ட்) கட்ட ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த முகமதுஉசேன் நூராணி. இவர் கடலூர் மாவட்டம்  சேத்தியாத்தோப்பு கூட்டுரோடு அருகே வடலூர் ரோட்டில் புதிதாக ஹோட்டல் கட்ட முடியு செய்துள்ளார். ஹோட்டலுக்கு செல்ல வசதியாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் மீது சிறுபாலம் (கல்வெர்ட்) அமைக்க அனுமதி கோரி பொதுப்பணித்துறை நீர்வள ஆதரார துறை பாசனப்பிரிவு உதவி பொறியாளர் கண்ணனிடம் விண்ணப்பித்திருந்தார். அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் தொகை லஞ்சமாக பொறியாளர் கண்ணன் கேட்டதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து முகமது உசேன் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் செய்தார். போலீஸார் அறிவுரையின்படி முகமது உசேன் திங்கள்கிழமை அன்று சேத்தியாத்தோப்பு அலுவலகத்திற்கு சென்று பொறியாளர் கண்ணனிடம் பவுடர் தடவிய ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை அளித்தார். அப்போது மாறுவேடத்திலிருந்த டிஎஸ்பி உதயசங்கர், இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், திருவேங்கடம், சண்முகம் மற்றும்  போலீஸார் லஞ்சம் பெற்ற கண்ணனை ரூ.20 ஆயிரம் ரொக்கத்துடன் கைது செய்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிந்து பொறியாளர் கண்ணனை கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் சிறையில் அடைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →