தற்போதைய செய்திகள்

கர்நாடகா அருகே முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாக வேலை செய்யும் மகனை மீட்ககோரி தாய் புகார்

படந்தால் கிராமத்தைச் சேர்ந்த எனக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். கடந்தாண்டு மே மாதம் மதுரை மாவட்டம்,

எஸ். பாண்டியன்

கர்நாடகத்தில் உள்ள சென்னப்பட்டினத்தில் முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாக வேலை செய்து வரும் மகனை மீட்டு தருமாறு தாய் மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனுவை நேரில் அளித்தார்.

இது குறித்து விருதுநகர் அருகே படந்தால் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி பாண்டியம்மாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

படந்தால் கிராமத்தைச் சேர்ந்த எனக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். கடந்தாண்டு மே மாதம் மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள மல்லப்புரம் கிராமத்தைச் சேர்ந்த முகவர் ஈஸ்வரன் எனது மகன் மாரீஸ்வரனை கர்நாடகத்தில் உள்ள சென்னப்பட்டனத்தில் முறுக்கு கம்பெனிக்கு  வேலைக்கு அழைத்து செல்வதாகக் கூறி என்னை அனுகினார். அதன்படி அனுப்பி வைத்தேன்.

அதன் அடிப்படையில் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் சென்னப்பட்டினத்தில் நடத்தி வரும் முறுக்கு கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து மேற்கண்ட முறுக்கு கம்பெனிக்கு எனது மகனிடம் தொலைபேசியில் பேச பலமுறை முயற்சி செய்தும் பேச முடியவில்லை. இதனால், அங்கு ஆள்கள் இல்லாத நேரத்தில் எனது மகன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினான். அதில், இங்கு ஓய்வு இல்லாமல் வேலை வாங்குவதாகவும், செய்யாவிட்டால் சித்ரவதை செய்வதாகவும், அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதாகவும் என்னிடம் அழுது கொண்டே தெரிவித்தான்.

இது தொடர்பாக எனது மகனை உடனே அனுப்பிவையுங்கள் என முகவர்  ஈஸ்வரனிடம் கேட்டேன். அதேபோல், முறுக்கு கம்பெனி நடத்தி வருகின்றவரிடம் கேட்டேன். ஆனால், கடந்த ஒரு மாதமாக முயற்சி செய்தும் இதுவரையில் எனது மகனை அனுப்புவதற்கு மறுத்து வருகின்றனர். அதனால், குறிப்பிட்ட இடத்தில் முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாக வேலை செய்து வரும் எனது மகனை உடனே மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் நேரடியாக கொடுத்த புகார் மனுவில் பாண்டியம்மாள் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT