முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு வாரம்

பயணிகள் ரயில் வண்டியில் பயணம் செய்யும் போதோ, காத்திருக்கும்போதோ தங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள

Updated On : 31 ஜூலை, 2013 at 8:57 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் விழிப்புணர்வு கூட்டம், ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் ஜி.ராவணன் தலைமைய்ல் சார்பு ஆய்வாளர் எம்.சேகனா முன்னிலையில் நடைபெற்றது. தலைமைக் காவலர் எம்.நைனார் வரவேற்றார்.

நிலைய அதிகாரி ராஜா உசேன் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

Advertisement

பயணிகள் ரயில் வண்டியில் பயணம் செய்யும் போதோ, காத்திருக்கும்போதோ தங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களிடம் திண்பண்டங்கள், குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது. நல்லவர்கள் போல பேசி உங்களின் பொருட்களை எடுத்துச் செல்லலாம். அல்லது அவர்கள் கொடுக்கும் பொருளில் மயக்க மருந்து கலந்திருக்கலாம். சன்னல் ஓர பயணத்தின் போது நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நடைமேடை மற்றும் ரயிலில் கேட்பாரர்று கிடக்கும் பொருட்களைக் கண்டால், நிலைய அதிகாரிகளிடும் கூற வேண்டும். ரயில் வண்டியில் புகைப்பிடித்துக்கொண்டு, மது அருந்திவிட்டு தகராறு செய்தால் பயணசீட்டு பரிசோதகர் அல்லது காவலர்களிடம் கூற வேண்டும். ரயில் பயணத்தின்போது ஏற்படும் இடர்பாடுகளை உடனே தீர்க்க, ரயில்வே உதவி மைய செல்போன் எண் 99625-00500 என்ற எண்ணில் உடனே தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர். கூட்டத்தில் ஏராளமான பயணிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.