முகப்பு
தற்போதைய செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை நிலவரப்படி பதிவான மழை விவரம்: பாபநாசம்அணையில் 23 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 13 மி.மீ மழையும்,

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:41 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததை அடுத்து பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை நிலவரப்படி பதிவான மழை விவரம்: பாபநாசம்அணையில் 23 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 13 மி.மீ மழையும்,சேர்வலாறு அணையில் 4 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 9.6 மி.மீமழையும் பதிவாகியுள்ளது.

இதேபோல் கடனாநதி அணையில் 2 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீமழையும், அம்பாசமுத்திரத்தில் 8.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 4.8 மி.மீ மழையும் பெய்துள்ளது.அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளின்நீர்வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 409.84 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதேபோல் சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் சற்று உயர்ந்துள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 0.80 அடி உயர்ந்து 48.95 அடியாகவும்,சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 63.25 அடியாகவும் இருந்தது.மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 20 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின்நீர்மட்டம் 74.64 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 32.00 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 40.25 அடியாகவும் இருந்தது.குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 104.75 கனஅடியும்,மணிமுத்தாறு அணையில் இருந்து 200 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →