முகப்பு
தற்போதைய செய்திகள்

துணைவேந்தர் பங்களாவில் குடிபுகும் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களின் விளைவாக, பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் துணைவேந்தர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:01 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகியாக தமிழக உயர்கல்வித்துறையால் நியமிக்கப்பட்டு பணியாற்று வரும் ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் பங்களாவில் குடிபுகுகிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களின் விளைவாக, பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தற்காலிக பணிநீக்கம் செய்து, பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்ஸை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து.  அவர் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகியா பொறுப்பேற்று பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருந்த நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தற்காலிகமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் ஷிவ்தாஸ்மீனா தங்கி பணிகளை மேற்கொண்டிருந்தார்.  இதனையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் எம்.ராமநாதன் தனது வீட்டை காலி செய்துவிட்டதால், துனைவேந்தர் பங்களாவில் ஷிவ்தாஸ்மீனா குடும்பத்துடன் தங்க முடிவெடுத்து, திங்கள்கிழமை துணைவேந்தர் பங்களாவில் பால் காய்ச்சி குடித்தனர். விரைவில் துணைவேந்தர் பங்களாவில் ஷி்வ்தாஸ்மீனா குடிபுகுவார் என பல்கலைக்கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →