அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், வேளாண் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு: 11087 பேர் தேர்வெழுதினர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7-
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மற்றும் வேளாண் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தமிழகம் முழுவதும் 7 மையங்களில் சனிக்கிழமை காலையும், மதியமும் நடைபெற்றது. இதில் மொத்தம் 11087 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 9-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
பொறியியல், வேளாண் மற்றும் மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுத மொத்தம் 24,587 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் வெள்ளிக்கிழமை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு காலையும், மாலையும் தமிழகம் முழுவதும் அண்ணாமலைநகர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய 7 மையங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 13500 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அண்ணாமலைநகர் மையத்தில் மட்டும் 3,435 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இன்று நடைபெற்ற பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வில் தமிழக முழுவதும் 7 மையங்களில் 11087 மாணவ, மாணவியர்கள் காலை பயாலஜி-1, மதியம் பிசிகல் சயன்ஸ் தேர்வும் எழுதியுள்ளனர். இதில் சிதம்பரம் அண்ணாமலைநகர் மையத்தில் மட்டும் 4767 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியுள்ளனர். பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் 90 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர் என பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் தெரிவித்தார். ஜூன் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை பேப்பர்-3 கணிதம் தேர்வு நடைபெறுகிறது.