காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல்ஜோடி!
சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெரு சின்னமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (24). இவரும் நேருநகரைச் சேர்ந்த கிருத்திகா (22) ஆகிய இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் வேவ்வேறு
பதிவு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெரு சின்னமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (24). இவரும் நேருநகரைச் சேர்ந்த கிருத்திகா (22) ஆகிய இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் வேவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் இருதரப்பு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் கடலூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செயது கொண்டனர். பின்னர் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கோரி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசியதை அடுத்த இருவருக்கும் சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் நேற்று(வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற்றது.