சிதம்பரம் புதிய டிஎஸ்பி ஆர்.ராஜாராம் பொறுப்பேற்பு
சிதம்பரம் ஏஎஸ்பியாக இருந்த எம்.துரை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்டாக பதவி உயர்வு பெற்று சென்றார். இதனையடுத்து புதிய டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்ட ஆர்.ராஜாராம் சனிக்கிழமை சிதம்பரம்
சிதம்பரம் டிஎஸ்பியாக ஆர்.ராஜாராம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிதம்பரம் ஏஎஸ்பியாக இருந்த எம்.துரை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்டாக பதவி உயர்வு பெற்று சென்றார். இதனையடுத்து புதிய டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்ட ஆர்.ராஜாராம் சனிக்கிழமை சிதம்பரம் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இவர் சென்னை வைஷ்ணவா கல்லூரி பிஎஸ்சி, எம்ஏவும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பிஎல் பட்டமும் படித்துள்ளார். குரூப்-2 தேர்வு எழுதிய லேபர் ஆபிஸராக பணியாற்றினார். அதன் பின்னர் 2007-ம் ஆண்டு குரூப்-1 தேர்வெழுதி டிஎஸ்பிக்கு தேர்வானார். 2010-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் பயிற்சி முடித்த பின்னர் 20011 மே மாதம் முதல் 2013 மே மாதம் வரை திருப்பூர் டிஎஸ்பியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது:
சிதம்பரம் கோட்டத்தில் காவல் பணி சரியாக செய்யப்படும். திருட்டு குற்றம் அதிகமாக இருந்த திருப்பூரில் பணியாற்றிய போது குற்றங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் முத்தூட் பைனான்ஸ் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த நான் 8 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்தேன். அதுபோன்று சிதம்பரம் கோட்டத்தில் திருட்டு சம்பவங்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.