முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவெறும்பூர் அருகே 60 பவுன் நகை கொள்ளை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் மேற்கு விரிவு பகுதியில் வசிப்பவர் கஸ்தூரி (40). இவரது கணவர் முருகேசன் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக பணியாற்றுகிறார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:06 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் மேற்கு விரிவு பகுதியில் வசிப்பவர் கஸ்தூரி (40). இவரது கணவர் முருகேசன் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக பணியாற்றுகிறார்.

கஸ்தூரி தனது உறவினருடன் நேற்று பழனிக்குச் சென்று விட்டு, இன்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க ஜன்னல் திறந்து கிடந்ததும், வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்டவை உடைக்கப் பட்டிருந்ததும் தெரிந்தது. பீரோவில் இருந்த 60 பவுன் நகை, ஒரு லட்சம் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை அடுத்து, திருவெறும்பூர் போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.