முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு: 3786   பேர் தேர்வெழுதினர்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் சேருவதற்கான

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:07 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பில் சேருவதற்கான பேப்பர்-3 கணிதம் நுழைவுத்தேர்வு தமிழகம் முழுவதும் 7 மையங்களில் இன்று காலை நடைபெற்றது. இதில் மொத்தம் 3786  மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 9-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.வ்பொறியியல், வேளாண் மற்றும் மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுத மொத்தம் 24,587 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் வெள்ளிக்கிழமை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு காலையும், மதியமும் தமிழகம் முழுவதும் அண்ணாமலைநகர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய 7 மையங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 13500 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். சனிக்கிழமை நடைபெற்ற பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வில் தமிழகம் முழுவதும் 7 மையங்களில் 11087 மாணவ, மாணவியர்கள் காலை பயாலஜி-1, மதியம் பிசிகல் சயன்ஸ் தேர்வும் எழுதியுள்ளனர்.

ஜூன் 9-ம் தேதி இன்று பொறியியல் படிப்பிற்கான பேப்பர்-3 கணிதம் நுழைவுத்தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் விண்ணப்பித்திருந்த 4459 பேரில் 3786 பேர் பங்கேற்று தேர்வெழுதியுள்ளனர் என பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →