முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் கோயிலுக்கு வந்த புது மணப்பெண் காணவில்லை என கணவன் புகார்

குறிஞ்சிப்பாடி தாலுக்கா வழுதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமனுக்கும், பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிகுப்பம் ரவிச்சந்திரன் மகள் மஞ்சுளா (18) என்பவருக்கும் கடந்த ஜூன் 3-ம் தேதி திருமணம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:07 PM
பகிர்:

சிதம்பரம் கோயிலுக்கு வருகை தந்த புது மணப்பெண்ணை காணவில்லை என அவரது கணவர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குறிஞ்சிப்பாடி தாலுக்கா வழுதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமனுக்கும், பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிகுப்பம் ரவிச்சந்திரன் மகள் மஞ்சுளா (18) என்பவருக்கும் கடந்த ஜூன் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கரிக்குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு விருந்திற்கு வந்த ரவிச்சந்திரன், தனது மனைவி மஞ்சுளாவுடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேற்று(சனிக்கிழமை) மாலை வந்துள்ளார். கோயிலுக்கு சென்று திரும்பி போது மனைவியை கோயில் வாயிலில் நிற்குமாறு கூறி மோட்டார் சைக்கிளை எடுத்து வரச் சென்றார். மோட்டார் சைக்கிளை எடுத்து வந்து பார்த்த போது மனைவி மஞ்சுளாவை காணாதது கண்டு அதிர்ச்சியுற்றார்.

இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் தனது மனைவியுடன் பழக்கம் இருந்த ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கலியங்குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவியை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →