மத்தியஅரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ல் உழவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ம் தேதி தமிழக உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ம் தேதி தமிழக உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு ஜூன் 12 புதன்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தலைமை வகிக்கிறார். தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் பங்கேற்று ஆர்ப்பாட்ட உரையாற்றுகிறார்.