தற்போதைய செய்திகள்

காலமுறை ஊதியம் கோரி முதல்வருக்கு கடிதம்: சத்துணவு ஊழியர்கள் முடிவு

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. செயலர் அன்பழகன் வேலை அறிக்கை சமர்பித்தார். கடலூர்

VASUDEVAN.K

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி வரும் 27-ம் தேதி  முதல்வருக்கு கடிதம் அனுப்ப சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. செயலர் அன்பழகன் வேலை அறிக்கை சமர்பித்தார். கடலூர் ஒன்றிய செயலர் மோகனசுந்தரம் வரவேற்றார்.மாவட்ட நிர்வாகிகள் மச்சேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, மாநில துணைத் தலைவர் ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை பற்றி விளக்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார்.

கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்னுரிமையோடு அணுகி தீர்க்கப்படும் என தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டாண்டாகியும், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இதுகுறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து ஜூன் 25-ம் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் விளக்க கூட்டம் நடத்துவது. வரும் 27-ம் தேதி சத்தணவு ஊழியர்கள் தங்கள் பிரச்னை குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT