திடீர் தீ விபத்து: கரும்புகையால் சூழ்ந்த தூத்துக்குடி குறிஞ்சிநகர்
தூத்துக்குடி குறிஞ்சிநகர் 4-ம் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் குட்டிராஜ் (30). இவர் லாரி மற்றும் வேன்களில் உள்ள பழைய டயர்களை விலைக்கு வாங்கி அதனை ரீ பட்டன் செய்து மீண்டும் விற்பனை செய்யும்
தற்போதைய செய்திகள்திடீர் தீ விபத்து: கரும்புகையால் சூழ்ந்த தூத்துக்குடி குறிஞ்சிநகர்
தூத்துக்குடி குறிஞ்சிநகர் 4-ம் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் குட்டிராஜ் (30). இவர் லாரி மற்றும் வேன்களில் உள்ள பழைய டயர்களை விலைக்கு வாங்கி அதனை ரீ பட்டன் செய்து மீண்டும் விற்பனை செய்யும்
தூத்துக்குடி குறிஞ்சிநகரில் இன்று பழைய டயர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது.
தூத்துக்குடி குறிஞ்சிநகர் 4-ம் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் குட்டிராஜ் (30). இவர் லாரி மற்றும் வேன்களில் உள்ள பழைய டயர்களை விலைக்கு வாங்கி அதனை ரீ பட்டன் செய்து மீண்டும் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக நூற்றுக்கும் மேற்ப்பட்ட பழைய டயர்களை வீட்டின் முன்பு குட்டிராஜ் அடுக்கி வைத்திருந்தாராம்.இந்நிலையில், டயர் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து இன்று பகல் 11.30 மணியளவில் தீடீரென புகைமூட்டம் எழுந்தது. அந்தப் பகுதியில் ஏற்பட்ட தீ காற்று வேகமாக வீசியதால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயர் முழுவதும் பரவி தீப்பிடித்து எரிந்தது.
டயர் தீ பிடித்து எரிந்ததால் அதில் இருந்து வெளியான கரும்புகை குறிஞ்சிநகர் முழுவதையும் சூழ்ந்தது. இதனால், மக்கள் மிகவும் அச்சமடைந்தனர். மேலும், புகைமூட்டம் காரணமாக சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையெடுத்து, தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தூத்துக்குடி தீயனைப்பு படை அதிகாரி சண்முகம் தலைமையில் தீயனைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ ஒருமணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.தீ விபத்துக்கான காரணம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பாலன பழைய டயர்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.